தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் தென்காசி கொடிமரத்திடலில் நேற்று உலமாசபை மாவட்ட தலைவர் எம் எச்.சம்சுதீன் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது. உலமாசபை தென்காசி வட்டார செயலாளர் எம் சம்சுதீன் வரவேற்றார். மாவட்ட செயலாளரும் தென்காசி மாவட்ட அரசு காஜியுமான ஏ.ஒய்.முஹ்யித்தீன் ஹஜரத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த கூட்டத்தில் ம.ம.க. மாவட்ட தலைவர் ஏ. நயினார் முஹம்மது, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் திவான் ஒலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக், முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில செயலாளர் எம் முகமதுஅலி, கடையநல்லூர் பேட்டை பள்ளிவாசல் தலைமை இமாம் கே.ஐ. சாகுல் ஹமீது வாஹிதி, தென்காசி பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஆலிம், டாக்டர் ராணி ஜப்பார், ராணி ஸ்ரீகுமார் எம்பி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வி. ஜெயபாலன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜா எம்எல்ஏ, எஸ் பழனி நாடார் எம்எல்ஏ, தென்காசி மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் வி.டி.எஸ்.ஆர்.முகமது இஸ்மாயில், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர். சாதிர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். கூட்டத்தின் இடை இடையே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.