ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாடுபடுத்தவும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு ஏதுவாகவும், தொழில்பயிற்சி பெறவும் பேப்பர் பை தயாரித்து அதன் மூலம் சங்கத்தின் உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயரவும் பைல் மற்றும் பேப்பர் பை தயாரிக்கும் மிஷினை நேற்று குற்றாலம் ரோட்டரி கிளப் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குற்றாலம் ரோட்டரி கிளப் சார்பில் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ். முத்துராமன் தலைமை தாங்கினார். ரோட்டரி துணைகவர்னர் சேகர், செயலர் திலீப், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் அமர்சேவா சங்கத்தின் முதன்மை கணக்காளர் ராஜேஸ்வரன் வரவேற்று பேசினார், அமர் பவுண்டேஷன் நிர்வாகி சண்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் தலைவர் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் செயலர் எஸ். சங்கரராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குற்றாலம் ரோட்டரி கிளப் சார்பினரால் அமர்சேவா சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.