சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி எனும் குட்டியப்பா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த், மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கைசோ மாரியப்பன், பொருளாளர் சண்முகையா, கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கிருஷ்ணன் எனும் கிட்டுராஜா, சத்யா தீபக், அலெக்ஸ் கருப்பையாதாஸ் ஹைதர் அலி, இடைகால் செல்லப்பா, முத்துகிருஷ்ணன், புகழேந்தி மெடிக்கல் சரவணன், வார்டு செயலாளர்கள் மற்றும் கிளை கழக செயலாளர்கள் குமந்தாபுரம் இசக்கி, டெய்லர் முருகையா, சுடலை, பால்சாமி, மாரியப்பன், பாலையா, செல்வராஜ், மகாராஜன், கண்ணன், ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.