தென்காசி: புதிய பேருந்து துவக்கி வைத்த அமைச்சர்

64பார்த்தது
தென்காசி: புதிய பேருந்து துவக்கி வைத்த அமைச்சர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (22.03.2025) புதிய பேருந்து இயக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புதிய பேருந்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி