தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு நேற்று தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பில் நடைபெற்ற தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் முதல் பரிசு சங்கமித்ரா, இரண்டாம் பரிசு நவீன் குமார், மூன்றாம் பரிசு பாலமித்ரன் ஆகியோருக்கு தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் பாராட்டி பரிசு வழங்கினார்.
கருத்தாளர்களாக சுலேகா பேகம், பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகதாஸ் மற்றும் பட்டதாரி ஆசிரியை சு. சுபாஷினி ஆகியோர் கலந்துகொண்டனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் வகுப்பில் கலந்துகொண்டனர்.