தென்காசி: ஆசிரம குழந்தைகள், முதியோருக்கு உணவு வழங்கல்

66பார்த்தது
தென்காசி: ஆசிரம குழந்தைகள், முதியோருக்கு உணவு வழங்கல்
தென்காசி அருகேயுள்ள சாம்பவர்வடகரையில் அன்பின் கரங்கள் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோருக்கு நேற்று (டிசம்பர் 29) தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட மக்கள் இயக்க தலைவர் சிவா தலைமை வகித்தார். 
ஆலங்குளம் தொழிலதிபர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உணவு வழங்கி பேசினார். 

இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் பத்மநாதன், இமானுவேல் ராஜன், ரமேஷ், முத்துவேல், ஆறுமுகம், கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் சரவணன், கனகராஜ், மதியழகன், தென்காசி கான், மாரியப்பன், சர்தார், சுரண்டை நகரத் தலைவர் கணேசன், முகிலன், ஆனந்து, வசந்த், கார்த்திக், ஜீவா, மதன், பார்டர் ஆனந்த், மணிகண்டன், மகளிரணி மாரியம்மாள், பாஞ்சாலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் தேவ சகாயம், லிகோ, இன்பென்ட், விஜய், மர்பின், ஜோசப் ரெமி மற்றும் நயினாரகரம் ஊராட்சி செல்வகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி