திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த தினத்தையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட பகுதிகளில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் ஏற்பாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் வடக்கு ஒன்றியம், வெங்கடாம்பட்டியில் இயங்கி வரும் டிரஸ்ட் இந்தியா இல்லத்தில் தங்கி படித்து வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 2) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சங்கர் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர்கள் முத்து நாடார், தங்கராஜ், ஒன்றிய பிரதிநிதி தானியல், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லையப்பர் புரம் மணியன் வரவேற்று பேசினார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு டிரஸ்ட் இல்ல குழந்தைகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, ஆயில் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆம்பூர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.