தென்காசி: அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்

53பார்த்தது
தென்காசி: அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்
தென்காசி மாவட்டம் கூடலூர் ஊராட்சி மெயின் ரோடு பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் அரசுத் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி