தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அரசு துவக்கப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் நேற்று சென்று பார்வையிட்டார். பள்ளி மாணவ, மாணவியர்களின் வருகை குறித்தும், கல்வியின் தரம் குறித்தும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டும், கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.
நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டும், நியாயவிலைக்கடையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணிகளை ஆய்வு மேற்கொண்டும், நிழற்குடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், கால்நடை மருந்தகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு மற்றும் தரம், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.