தென்காசி மாவட்டம், செங்கோட்டை பேரூந்து நிலைய வணிக வளாக கட்டுமான பணிகளை இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் நிலையத்தில் ரூபாய் 2 கோடியே 88. லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஏ. கே. கமல்கிஷோர் ஆய்வு செய்வதற்காக பஸ்நிலையத் திற்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து வணிக வளாகம் கட்டும்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நடைபெற்று வரும் வணிகவளாக கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும்,
பஸ் நிலையத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.
ஆய்வின் போது செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் சேம்கிங்ஸ்டன், பொறியாளா் முகைதீன்பிச்சை நகர் மன்ற தலைவர் இராமலட்சுமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ். எம். ரஹீம் ஆகியோர் உடன் இருந்தனர்.