செங்கோட்டை அருகே உள்ள பூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு அதேபோல் நேற்று (அக்.,5) புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு பண்பொழி நாயுடு சமுதாயம் சார்பில் பூமிநீளா சமேத ஸ்ரீசுந்தராஜ பெருமாள் மற்று பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பண்பொழி அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா் நாயுடு சமுதாய நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனா்.
தென்காசி குத்துக்கல்வலசை அருள்மிகு பசி துஷ்ட ராய கண்ட விநாயகர் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் விநாயகருக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாரனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.