கடையம்பெரும்பத்தில் இலவச கழிவறை கட்ட ஆணை வழங்கிய பஞ். தலைவர்

54பார்த்தது
கடையம்பெரும்பத்தில் இலவச கழிவறை கட்ட ஆணை வழங்கிய பஞ். தலைவர்
கடையம்பெரும்பத்து ஊராட்சி யில், இலவச கழிவறை கட்டிட பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் நேற்று நேரில் சென்று ஆணையினை  வழங்கினார்.

கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம் பெரும்பத்து ஊராட்சி பகுதியில் கழிவறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவறை இல்லாத வீடுகளை கண்டறிந்து, பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று,  இலவச கழிவறை கட்டுவதற்கான ஆணையை ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்.

இதில் கடைபெரும்பத்து திமுக நி;ர்வாகி பரமசிவன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி