பத்ம விருதுகள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-ஆட்சியர்

85பார்த்தது
பத்ம விருதுகள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-ஆட்சியர்
இந்திய அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டத்தை சார்ந்த விளையாட்டு துறையில் சாதனை புரிந்த தகுதி வாய்ந்த நபர்கள் 2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளான “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” (ம) “பத்ம ஸ்ரீ” ஆகிய விருதுகளுக்கு https: //padmaawards. gov. in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்திடலாம்.

விளையாட்டு துறையில் அதிகபட்ச சாதனை புரிந்தவர்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவ விபரத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ, ரயில்வே ரோடு, தென்காசி - 627 811 என்ற முகவரியில் 29. 06. 2024 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி