தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் திடலில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அரசு விழா அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவன தலைவர் பொன் முருகேசன் தலைமையிலும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இமானுவேல் சேகரனார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.