தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முழு நேர கிளை நூலக புதிய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர், தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ் விஜயன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.