தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் AIIEA செயலக முடிவின் அடிப்படையில் இன்று 09. 07. 24 திருநெல்வேலி கோட்டம் சார்பில் தென்காசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து பாண்டி உதவியோடு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஶ்ரீகுமார் சந்தித்து இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான GST வரியினை ரத்து செய்திட பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப கோரி மனு அளிக்கப் பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து நிச்சயம் பேசுவதாக தெரிவித்தார்.