தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லத்திகுளம் வடக்குத்தெருவே சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் அந்தப் பகுதியில் உள்ள கிணறு ஓரங்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார், அப்போது எதிர்பாரா விதமாக ஆடு கிணற்றில் தவறி விழுந்தது இதைக் கண்ட முத்துக்குட்டி சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்,
விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டு ஆட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.