சிவகிரியில் கஞ்சா விற்றவர் கைது

50பார்த்தது
சிவகிரியில் கஞ்சா விற்றவர் கைது
சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் சிவகிரி மலைக்கோவில் ரோட்டில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் நின்ற நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தார்.

இதனை அடுத்து உதவி ஆய்வாளர் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள்
இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது சிவகிரியைச் சேர்ந்த குருசாமி மகன் கார்த்திக் பாண்டி (வயது 36) என தெரிய வந்தது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கார்த்திக் பாண்டியை கைது செய்து அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் பாண்டி சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி