தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த குறிஞ்சாக்குளம் பொதுமக்களுக்கு வருகின்ற புத்தாண்டு விழாவை முன்னிட்டு காந்தாரியம்மன் விளையாட்டு திடலில் வைத்து விடுதலை சிறுத்தைகட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது சம்பந்தமாக மனு வழங்கப்பட்டது.
இந்த மனுவை பெற்று சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா மற்றும் சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன், வழக்கறிஞர் பெஞ்சமின், சங்கரன்கோவில் தொகுதி துணைச் செயலாளர் ஜெரால்ட், குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராஜ், இளஞ்சிறுத்தை ஜெகன், ராஜகோபால் மற்றும் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.