தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் 2024 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 6ம் தேதி காலை 11: 00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர் களும் பங்கேற்கிறார்கள்.
எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணை யும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிட மிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளி லும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ் செய்தியாக அனுப்பப்படும்.
இக்குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.