ஆவுடையானூரில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

56பார்த்தது
ஆவுடையானூரில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், பம்பு ஆப்ரேட்டர்கள் பணியாற்றி வரும் நிலையில் கடந்த மாதம் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாத சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாகவும்,

சமீபத்தில் ஆவுடையானூர் ஊராட்சியில் தலைவரின் காசோலையில் கையொப்ப மிடும் தகுதி நிராகரிக்கப்பட்ட தால் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரே சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக் கும் வழங்க வேண்டிய பணிகளை காசோலையில் கையொப்பமிட்டு  செய்து வந்த நிலையில்,

சரி வர வட்டார வளர்ச்சி அலுவலர் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வருவதாலேயே தங்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்பட வில்லை எனவும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பஞ்சாயத்து கிளர்க்  மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் என மூன்று பேரும் சேர்ந்து அவரவர்களின் செல்போன்
களுக்கு வரும் குறுஞ் செய்தி களை வழங்கி சம்பளத்தை கொடுத்து வந்த நிலையில் தற்போது சம்பளம் கொடுக்கப்படவில்லை.

மாத சம்பளம் இதுவரையில் வழங்கப்படாததால் தாங்கள் பெரிதும் கஷ்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாவூர்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர்களிடம்  
பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான சம்பளத் தொகையை வழங்க ஏற்பாடு செய்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி