தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மலம்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் பழனி குமார். அவரது மனைவி கோமதி, கடந்த சனிக்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, தெருவில் தங்கச் சங்கிலி கிடப்பதைப் பார்த்தாராம். அதை எடுத்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தங்கச் சங்கிலியை தவறவிட்டது மேலகடையநல்லூர் கன்னிப்பாண்டியன் மனைவி கவிதா என தெரியவந்தது. இதையடுத்து, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் முன்னிலையில் கவிதாவிடம், கோமதி தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். இதையடுத்து கோமதியைப் போலீசார் பாராட்டினர்.