அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் விஷு கணி தரிசனம்

69பார்த்தது
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் விஷு கணி தரிசனம்
தமிழக எல்லையையொட்டி கேரளத்தில் அமைந்துள்ள அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஷு கணி தரிசனம், கைநீட்டம் நடைபெற்றது.கேரள மாநிலத்தில் சித்திரை விஷு நாளில் கனிகளை சுவாமிக்கு படைத்து பூஜை செய்து வழிபடுவார். 

சபரிமலை உள்ளிட்ட அனைத்து முக்கிய கோயில்களிலும் விஷு கணி தரிசனம் நடைபெறும். அப்போது, புத்தாண்டின் முதல் நாளில் சுவாமியிடமிருந்து பக்தர்களுக்கு முதல் வரவாக காசு வழங்கும் 'கைநீட்டம்' எனப்படும் நிகழ்ச்சியும் நடைபெறும்.அதன்படி, அச்சன்கோவில் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி முன் மண்டபத்தில் பலவித கனிவகைகள், பூக்கள், அலங்காரங்கள், பட்டு வஸ்திரங்கள், தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், கண்ணாடி, மங்கலப் பொருள்கள் வழியாக சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதில், திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து, கைநீட்டம் நடைபெற்றது. புத்தாண்டின் முதல் வரவாக சுவாமியிடமிருந்து காசுகளை பக்தர்களுக்கு மேல்சாந்தி வழங்கினார். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி