தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கி, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இந்நிலையில், அருவிகளில் குளிக்கும் ஆண்களின் கழுத்து செயின்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, மெயின் அருவி, ஐந்தருவிகளில், ஆண்கள் குளிக்கும் பகுதிகளில், சுற்றுலா பயணியரோடு சேர்ந்து குளித்துக் கொண்டே, அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயின்களை பறித்த, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சுரேஷ்குமார், (45), விருதுநகர் மாவட்டம், சாத்தியாபுரத்தை சேர்ந்த விஜயகுமார், (37), ஆகிய இருவரையும் குற்றாலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஐந்து சவரன் நகைகளை மீட்டு இருவரையும் சிறையில் அடைத்தனர்.