போலி கூப்பன் கொடுத்து மோசடி செய்த இருவர் கைது

71பார்த்தது
போலி கூப்பன் கொடுத்து மோசடி செய்த இருவர் கைது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம், மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீதா. இவர் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவரிடம் குலுக்கள் முறையில் கூப்பன் பெற்று டிவி வாங்கியுள்ளார்.

வாங்கிய சில நாட்களில் டிவி பழுதாகியுள்ளது. இது குறித்து கேட்டதற்கு முறையான பதில் இல்லை என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடையம் போலீசார் சங்கரன்கோவிலை சேர்ந்த முருகன் மற்றும் செல்லத்துரை ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி