தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவிந்தனா்.
குற்றாலத்தில் நிகழாண்டில் முன்கூட்டியே அனைத்து அருவிகளிலும் தண்ணீா் விழத் தொடங்கியது. பக்ரீத் பண்டிகை மற்றும் விடுமுறை தினமான சனிக்கிழமை, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அருவிகளில் மிதமாகக் கொட்டும் நீரில் அவா்கள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலத்தில் நேற்று காலைமுதல் வெயில் நிலவியது. இரவில் குளிா்ந்த காற்று வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.