தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழையால் பேரருவி, ஐந்தருவி, பழயைகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐந்தருவியில் நீா்வரத்து குறைந்து சீற்றம் தணிந்ததால் குளிக்க அனுமதிக்கப்பட்டு, சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.