தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 84 அடி கொள்ளளவு கொண்ட இராமாநதி அணை அமைந்துள்ளது.
இதில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு 109 கன அடி நீர்வரத்து இருக்கும் நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 87 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருதி அணைப்பகுதிக்கு செல்ல தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தடை விதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.