வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று (டிசம்பர் 12) இடைவிடாமல் கனமழை பெய்தது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. செங்கோட்டையில் உள்ள குளம் ஒன்று உடைந்து தண்ணீர் விளைநிலங்கள், சாலையில் ஓடுகிறது. இதனால் செங்கோட்டை - கேரளா செல்லும் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.