இடைக்கால அருகே வாகனங்கள் மோதி விபத்து

56பார்த்தது
இடைக்கால அருகே வாகனங்கள் மோதி விபத்து
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இடைகாலை அருகே தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இடைகாலை பால மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி