கேரளாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான மோகன்லால். தனது 18-வது வயதில் 1978-ஆம் ஆண்டு வெளியான திரனோட்டம் என்ற மலையாளத்திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளம், தமிழ், கன்னட மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் தனது 46 ஆண்டுகள் திரைப்பயணம் நிறைவடைந்து 47வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழக கேரள எல்லையில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பன்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.