தென்காசி மாவட்டம் இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் கலாம் நினைவு நாள் விழா அனுசரிக்கப்பட்டது.
இதில் மாணவர்களின் எழுச்சி நாயகனாக கருதப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 9ம் ஆண்டு நினைவு நாளில் திருவுருவப் படத்திற்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கலாமின் அம்மா பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் முன்னேற்ற பலர் கலந்து கொண்டனர்.