மனிதநேய மக்கள் கட்சியின் 16 வது ஆண்டு விழா கொடியேற்றம்

53பார்த்தது
மனிதநேய மக்கள் கட்சியின் 16 வது ஆண்டு விழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் தென்காசி நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 16 வது ஆண்டை முன்னிட்டு இன்று நகரத் தலைவர் அபாபில் மைதீன் தலைமையில் தென்காசியில் 10 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றப்பட்டது.

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரக் கழக செயலாளர்கள் ஆதம்பின் ஆஷீக், களஞ்சியம் பீர், சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ் மைதீன் சேட்கான் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி