தென்காசி மாவட்டம் திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் காணப்பட்டது.
இன்று 1ம் தேதி திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. இதனால் திருவேங்கடம், கலிங்கப்பட்டி, கரிசல்குளம், அழகாபுரி, செல்லப்பட்டி, வரகனூர், மைய்பாறை, நடுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய திடீர் கனமழை பெய்தது.
இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.