தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ரவண சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக்(32). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசுக்கு வந்த தகவல் சென்றது.
இதையடுத்து கடையம் போலீசார் மந்தியூர் செல்லும் வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டு, ஆஷிக்கை கையும் களவுமாக பிடித்தனர்.
இதில் அவரிடம் இருந்த 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கடையும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.