தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் கழிவு நீரோடை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 8ஆவது வார்டு வடக்கு பருத்திவிளை தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, ரூ. 17 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள கழிவு நீரோடைக்கான அடிக்கல்லை நாட்டினார். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள் மாலதி, தனலட்சுமி, மாரி, கடையநல்லூர் நகராட்சி உதவி பொறியாளர் அன்னம், பொறியாளர் பிரிவின் சுரேஷ், திமுக துணைச் செயலர் காசி, வார்டு செயலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.