தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். குற்றாலம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 7ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் திரும்பிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.