சங்கரன்கோவில் அருகே விவசாயிக்கு மின்சாரம் தாக்கி படுகாயம்

79பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி சண்முகையா கடந்த வாரம் பெய்த கன மழையால் இவரது வயக்காட்டில் இருந்த மின்கம்பமானது சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக அவரது வயக்காட்டில் சென்றுள்ளது இதனை அடுத்து மின்வாரிய அலுவலகத்தில் சண்முகையா புகார் தெரிவித்துள்ளார்.

புகார் தெரிவித்தும் ஏழு தினங்களுக்கு மேல் ஆகியும் தாழ்வாக தொங்கிய மின்கம்பிகளை சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இந்த நிலையில் நேற்று மாலையில் தனது வயற்காட்டில் விவசாய வேலை செய்து வந்த சண்முகையா எதிர்பாராத விதமாக மின் கம்பியின் அருகில் செல்லும் போது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்.

இதனை கண்ட அங்கிருந்த உறவினர்கள் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லிங்கம் பொங்கல் சாய்ந்து தாழ்வாக தொங்கிய மின் கம்பிகளை சரி செய்யாமல் காலம் தாழ்த்திய மின்வாரிய ஊழியர்களால் தான் இன்று விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி