கடையம் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு

70பார்த்தது
கடையம் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் பாப்பாகுடி அருகே வழுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (50) இவர் கடையம் நெல்லை சாலையில் மோட்டார் சைக்கிளில் இடைகால் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கட்டுமான பணி நடைபெறும் புதிய பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு இழந்து தடுப்பு சுவரில் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி