தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தோட்டங்கள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (டிச.28) இரவு விவசாய தோட்டத்திற்கு வந்த காட்டு யானை கூட்டங்கள் பத்து தென்னை மரங்களுக்கு மேல் சேதப்படுத்தியுள்ளன.
இதுவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120 தென்னை மரங்கள் அந்த பகுதியில் முற்றிலுமாக சேதமானது குறிப்பிடத்தக்கது. உடனே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண்டுமென பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.