தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு ரூ. 1 லட்சம் நன்கொடை

79பார்த்தது
தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு ரூ. 1 லட்சம் நன்கொடை
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தன்று அன்னதானம் வழங்க கெளண்டியா டிரஸ்ட் சார்பில் ரூ. 1லட்சம் நன்கொடை நேற்று மாலையில் வழங்கப்பட்டது. 

இக்கோயிலில் ஏப். 7ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தன்று காலை 7 மணிமுதல் இரவு வரையிலும் பக்தர்கள் அனைவருக்கும் சிவகாசி வைரமுத்து தலைமையிலான சிவபக்தர்கள் அன்னதானம் வழங்குகின்றனர். இதற்காக தென்காசி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கெளண்டியா டிரஸ்ட் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணன், நந்தினி ரமணன் ஆகியோர் சிவபக்தர் வைரமுத்துவிடம் அன்னதானத்துக்காக ரூ. 1லட்சம் நன்கொடைக்கான காசோலையை வழங்கினார். கோயில் செயல் அலுவலர் ஆ. பொன்னி, தொழிலதிபர்கள் எம். ஆர். அழகராஜா, வெங்கடேஷ்ராஜா, சிவகாசியை சேர்ந்த குருசாமி, சேகர், கண்ணன் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி