தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
மேலும் தார் சாலையானது சற்று அகலப்படுத்தப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.