கடையநல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா

68பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தனியார் சமுதாய நலக்கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 100 கர்ப்பிணி களுக்கு சமுதாய வளை காப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் தலைமை தாங்கினார்.

கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் , கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரக்கத் சுல்தானா
வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி வளையல்களை அனுபவித்தார் மருத்துவர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் கர்ப்ப காலங்களில் ஒவ்வொரு தாய்மார்களும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுரையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் சிவகாமி, மகேஸ்வரி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், கரடிகுளம் பஞ்சாயத்து துணை தலைவர் பால அருணாசலம் கௌரி கருப்பசாமி உட்பட ஏராளமான கலந்து கொண்டனர் நூறு கர்ப்பிணி பெண்களுக்கும் மதியம் சத்தான ஆறு வகை சாதங்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி