கடையநல்லூர் பள்ளி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து
By Velu 72பார்த்ததுதென்காசி மாவட்டம் கடையநல்லூரை சுற்றி அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளன.
இங்கு பயிலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லாத நிலையில் ஆட்டோவை நாடிச் செல்கின்றனர்.
இன்று காலையில் விஷ்டம் பள்ளி அருகே அரசு கல்லூரி மாணவிகள் பயணித்த ஆட்டோ நிலை தடுமாறி சாலை ஓரங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த மாணவிகளை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆள் ஏற்றியதால் விபத்து என தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.