தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 412 அதிமுகவினரை கடையநல்லூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.