குற்றாலத்தில் பிடிபட்ட அரியவகை ராஜநாகம்

59பார்த்தது
தென்காசி மாவட்டம் குற்றாலம் தனியார் சொகுசு விடுதியில் மரத்தின் மேலே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாக சுற்றுலா பயணிகள் கண்டனர்.

உடனே குற்றாலம் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குற்றாலம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கொடிய விஷம் கொண்ட அரிய வகை ராஜநாகம் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மரத்தில் சுற்றித்திரிந்த ராஜ நாகத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு லாவகமாக பிடித்தனர்.

இதை கண்ட சுற்றுலா பயணிகள் வனத்துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி