சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்ட்ரால் பரபரப்பு

61பார்த்தது
சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்ட்ரால் பரபரப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் அ. தி. மு. க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் அக்கட்சியை வழிநடத்த சசிகலா வரவேண்டும் என கோரி பாவூர்சத்திரம், தென்காசி பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த போஸ்டர்களில், கழகத்தை காக்க வாருங்கள் புரட்சி தாய் சின்னம்மா அவர்களே. போதும், போதும் இந்த பொறுமை போதும். கழக உறுப்பினர்களையும் கழகத்தை நிலைநாட்டி கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து உயிர்பிக்கவும் தங்களது பாணியில் மீண்டும் கழகத்தை வழிநடத்தவும் தலைமை ஏற்கவும் வாருங்கள் வாருங்கள்.

தாயே புரட்சித்தாய் சின்னம்மா அவர்களே சிங்க பெண்ணாய் வாருங்கள் என்ற வாசகத்துடன் கழக வழக்கறிஞர் அணியினர் சார்பில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி