கீழப்பாவூா் கோயிலில் ஜூலை 12-இல் வருஷாபிஷேகம்

69பார்த்தது
கீழப்பாவூா் கோயிலில் ஜூலை 12-இல் வருஷாபிஷேகம்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத தேனு கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் ஜூலை 12-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இக் கோயிலில் ஜூலை 12-ஆம் தேதி காலை 7 மணி முதல் பரம புருஷ ஆராதனை, பஞ்ச சுத்த ஹோமம், விசேஷ திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து விமானம், மூலவா் மற்றும் கருடாழ்வருக்கு வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு மேல் ஸ்ரீ ருக்குமணி கல்யாணம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் மற்றும் அா்ச்சகா் ரவி பட்டாச்சாரியாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

டேக்ஸ் :