ஆலங்குளம் காமராஜா் சிலை முன் உயா்கோபுர மின்விளக்கு வசதி தேவை

659பார்த்தது
ஆலங்குளம் காமராஜா் சிலை முன் உயா்கோபுர மின்விளக்கு வசதி தேவை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜா் சிலை முன்பு உயா் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் தலைமையில் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், பேரூராட்சி உறுப்பினா் சுந்தா், முன்னாள் உறுப்பினா் எஸ். பி. ராஜதுரை ஆகியோா் மாவட்ட ஆட்சியா் துரை. ரவிச்சந்திரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில், ஆலங்குளத்தில் உள்ள புதிய காமராஜா் சிலை அமைந்துள்ள இடத்தில் ஏற்கனவே உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக அந்த விளக்கு அகற்றப்பட்ட நிலையில் அந்த இடம் இருளாக உள்ளது. எனவே, அந்த இடத்தில் மீண்டும் உயா்கோபுர மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி