கடையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

61பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சேர்வைக்காரன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாசுகிரி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து அங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை அங்கு உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஆனது பொங்கி சாலைகளில் வீணாக செல்கிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று குடிநீர் பைப் லைனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி